Newskadai.com
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் சாதனை: நெருக்கடி கொடுத்த பஞ்சாப், சிக்சர் மழை பொழிந்த ராஜஸ்தான்

Share this:

13-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்தது.224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச சேஸிங் ஆகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர். பட்ல ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக, ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பவுண்டரிகளாக அடித்து நொறுக்கியது. 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்மித், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். சஞ்சு சம்சன் 42 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால் ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்தில் இருந்தனர்.

பேட்டிங்கில் திணறி வந்த தேவாட்டியா யாரும் எதிர்பாராத நிலையில் இந்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். காட்ரெல் வீசிய 18வது ஓவரில் தேவாட்டியா சிக்ஸர் மழை பொழிந்தார். இந்த ஒரு ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள். ஆட்ட இறுதியில் 9 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற பதட்டமான நிலை உருவானது. மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த தேவாட்டியா 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் களமிறங்கிய டாம் கரண் பதற்றமே இல்லாமல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம், ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது நாங்கள்தான் என்று காண்பித்துள்ளது.


Share this:

Related posts

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

ஆடவும் இல்லை..!! ஓடவும் இல்லை..!! 100 தொடாத கொல்கத்தா… அசால்டாய் வென்ற பெங்களூரு…

MANIMARAN M

அதிக ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி..!!!

MANIMARAN M

#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…!!

MANIMARAN M

”ஓடவும் மாட்டேன் ஒளியவும் மாட்டேன்”… கடினமான சூழலையும் கச்சிதமாக அணுகும் தோனி ஆவேசம்..!!

NEWSKADAI