Newskadai.com
விளையாட்டு

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

Share this:

2020 மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சத்தின் காரணமாக ஏப்ரல் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் இறுதியிலுருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் தொடர்ச்சியாக ஐபிஎல். தொடர் போட்டிகள் நடத்த இயலாமல் போனது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து ஐபிஎல் தொடர் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு மத்திய அரசும் இசைவு தெரிவித்துள்ளது. எனவே செப்டம்பரில் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெறும். போட்டியின் விவரங்கள் இன்னும் 7 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்,

மேலும் இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மூதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


Share this:

Related posts

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வெற்றிக்கு காரணம் என்ன..? தோனியின் ருசிகர பேட்டி..!!

MANIMARAN M

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

NEWSKADAI

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M