Newskadai.com
தமிழ்நாடு

ஹிந்தி தெரியாதா..? லோன் கிடையாது… தமிழகத்தில் டாக்டருக்கு நேர்ந்த அவலம்…

Share this:

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மருத்துவர் பாலசுப்ரமணியன். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இவரது சொந்த ஊர். அவ்வூரிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளராக உள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனது சொந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக லோன் கேட்டு வங்கியை அணுகி உள்ளார். அந்த வங்கிக் கிளையில் மேலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்.

மருத்துவரிடம் ஆங்கிலத்தில் உரையாடிய வங்கி மேலாளர் மருத்துவருக்கு ஹிந்தி மொழி தெரியுமா என கேட்டுள்ளார். மருத்துவர் தமக்கு ஆங்கிலம், தமிழ் நன்கு தெரியும் என கூறியுள்ளார். தான் கொண்டு வந்து இருந்த ஆவணங்களை காண்பித்து ஆங்கிலத்தில் பேசிய மருத்துவரிடம் இந்தியில் பேசுங்கள் எனக்கு இந்தி தான் தெரியும், நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை எனக்கூறி வங்கிக்கடன் தர மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் பாலசுப்பிரமணியன் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்ட கொரோனா… உங்க மாவட்டத்தில் எவ்வளவு…!?

NEWSKADAI

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN