காலங்கள் மாற மாற, போராட்டங்களும் புது புது வடிவம் பெறுகின்றன. நமது தூங்கா நகரம் மதுரையில் தான் ஒரு வித்தியாசமான போராட்டத்தை பெண்கள் நடத்தினர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் சொட்டாங்கல் விளையாடியும், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடியும், வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.
- சீர் மரபினர் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்.
- சீர் மரபினர் ஜாதி சான்றிதழ்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் வழங்க வேண்டும்.
- OBC-யினருக்கு உயர் பதவி வழங்க வேண்டும்.
- அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 27 சதவிகித சீர் மரபினர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- ரோகிணி குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.