Newskadai.com
தமிழ்நாடு

கோவை சிறையில் ‘கைதி’ தூக்கிட்டு தற்கொலை… சாவில் ‘சந்தேகம்’ இருப்பதாக உறவினர்கள் புகார்…!

Share this:

கோயம்புத்தூர் மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக  மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜா வயது 32. இவரது மனைவி ஷீபா இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுனராக சுரேஷ் ராஜா பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 23 ம் தேதி ஜாமீன் நிறைவடைந்த நிலையில் அன்று மாலையே வேறொரு திருட்டு வழக்கில் சுரேஜ் ராஜாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Coimbatore Central Jailமேலும் படிக்க:http://குட் நியூஸ்: வந்தாச்சு 2வது கொரோனா தடுப்பூசி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

 இதனால் மனமுடைந்த சுரேஷ் ராஜா நேற்று சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.  இதையடுத்து சக கைதிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார், சுரேஷ் ராஜாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறை துறையினர் சுரேஷ் ராஜாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சுரோஷ் ராஜாவை சிறையில் அடித்து கொலை செய்துவிட்டு, சிறைத்துறையினர் தவறான தகவலை அளிப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சுரேஷ் ராஜாவின் உறவினர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டத்திலும் ஈட்டுபட்டனர்.


Share this:

Related posts

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

THAVAMANI NATARAJAN

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI

மணல் திருட்டு விவகாரம்: தமிழக அரசின் கறார் நடவடிக்கைகள்…!

THAVAMANI NATARAJAN