Newskadai.com
இந்தியா

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

Share this:

ரயில்வேத் துறையில் தனியார் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்து செயல்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பினால் கடந்த நான்கு மாதகாலமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ரயில்வே நிரந்தர காலி பணியிடங்களை குறைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

ரயில்வே துறையின் சிக்கன நடவடிக்கையாக பாதுகாப்பு பிரிவு அல்லாத மற்ற பிரிவுகளில் உள்ள 50 சதவீத காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் அடங்கிய தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் பாதுகாப்பு பிரிவுகள் அல்லாத 7192 நிரந்தர காலி பணியிடங்களில் 50 சதவீத 3596 பணியிடங்களை திரும்ப ஒப்படைக்கவும், மீதமுள்ள 3596 இடங்களை நிரப்பிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களை திரும்பபெறும் நடவடிக்கைகளை ரயில்வே சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதுக் குறித்து கூறிய தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர். காலி பணியிடங்களை திரும்ப பெறுவதால் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரிக்கும் என்றும், நிர்வாக பணியில் தேக்கம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், ரயில்வே தனியாரிடம் விற்கப்படுவதால் காலி பணியிடங்கள் குறைக்கப் படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது, கொரொனாவால் வருவாய் இழப்பு தற்காலிகமானது, அதற்காக இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இந்த சிக்கன நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். காலி பணியிடங்கள் திரும்ப பெறும் நடவடிக்கையின் காரணமாக மீதமுள்ள காலி பணியிடங்களுக்கு எப்பொழுது தேர்வுநடத்தப்படும் என்று ரயில்வே தேர்வாணையத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் விண்ணப்பத்தாரர்கள்.


Share this:

Related posts

“ஒருபோதும் மொழி திணிப்பு கிடையாது” : மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!

MANIMARAN M

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M