Newskadai.com
தேர்டு ஐ

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

Indian Philosophy
Share this:

ரிக் வேத சம்கிதையின் பத்தாவது மண்டலத்தில் (129) நாசதீய சூக்தம் இடம்பெற்றுள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஒருஇடைசெறுகல் என்றாலும், படைப்பைப் பற்றிக் கூறப்படுகிற மிகமிகப் பழைமையானபாடலாகும். பிரபஞ்சத்தை ஒரு சக்தி படைத்திருக்குமோ? என்ற கேள்வி எழுந்தபோது இந்தப் பாடல் தோன்றியிருக்க வேண்டும். அந்தச் சக்தியை இதில் “தத் ஏகம்”(அந்த ஒன்று) என்று கூறப்பட்டுள்ளது. அந்தத் “தத்” (அது) பிரம்மத்தை நேரடியாககுறிப்பிடவில்லை என்றாலும், இந்த சிந்தனை பிரம்மத்தை நோக்கியே செல்கிறது.சந்தேகங்கள், கேள்விகள் இதில் எழுப்பி இருந்தாலும், இந்தச் சூக்தம் பிரம்மத்தைநெருங்கிவிட்டது.

ஏழே பாடலில் பெரும் பிரபலத்தைப் பெற்றுவிட்டது. அந்த ஏழுபாடல்களையும் முழுமையாகப் பார்க்கும் முன அதன் சாரத்தைப் பார்ப்போம்.படைப்புக்கு முன்பு இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை, மூச்சற்றஅந்த ஒன்று தமது சக்தியினால் சுவாசித்தது, அப்போது அதற்கு அப்பால் வேரெதுவும்இல்லை. அனைத்தையும் தம்முள் கொண்டுள்ள அது, தவத்தின் மகிமையினால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

Nasadiya sukta

இதனை ரிஷிகள் உள்ளுணர்வால் உணர்ந்தனர்.(உணர்ந்ததாகத் தெரிவித்தாலும் இந்தப் பாடல்கள் சந்தேகத்தைக் கேள்வியாகத் தொடர்கிறது.) தேவர்கள் இந்தப் படைப்புக்கு பிறகு தோன்றியவர்கள், அதனால் இவர்களுக்கு இது தெரியாது. இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்ற கேள்வியும், விண்ணில் உள்ள அந்தப் படைப்பின் தலைவருக்கு, தெரிந்திருக்கும், ஒருவேளை அவருக்குத் தெரியாதோ! என்ற சந்தேகத்தையும் இந்தச் சூக்தம் எழுப்புகிறது.

1) படைப்புக்கு முன்பு இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை, மேலான வானும் இல்லை. மூடிபோன்று இருக்கிறதே அது என்ன? அது எதை மூடியிருந்தது? அது எங்கே உள்ளது? அனுபவம் யாருக்கு? அழம் காண முடியாத தண்ணீர் இருந்ததா!

2) அப்போது மரணம் இல்லை, மரணமின்மையும் இல்லை. இரவு பகலின் அடையாளமே இல்லை. மூச்சற்ற அந்த ஒன்று தமது சக்தியினால் சுவாசித்தது. அதற்கு அப்பால்அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

3) அப்போது இருள் இருளால் மூடப்பட்டிருந்தது. இந்த எல்லாம் அடையாளம் காண முடியாத வெள்ளமாய் இருந்தது. அனைத்தையும் தம்முள் கொண்டதாக, வெறுமையால் மூடப்பட்டிருந்தது. ஒருவராக அது தவத்தின் மகிமையினால் தம்மை வெளிப்படுத்திக் கொண்டது.

4) மனத்தின் முதல் விதையாக எது இருந்ததோ, தொடக்கத்தில் அந்த விருப்பம் எழுந்தது. இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் உண்மைக்கும் உண்மையல்லாததற்கும் இடையேயான தொடர்பை உள்ளுணர்வால் கண்டனர்.

5) இவற்றின் கதிர்கள் கீழே மேலே இருந்தன, குறுக்கேயும் பரந்தன. சந்ததியைத் தோற்றுவிக்கும் வல்லமை இருந்தன. மகத்தானவை இருந்தன. கீழே சக்தி இருந்தது மேலே வேகம் இருந்தன.

6) உண்மையில் அறிந்தோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது? யாரால் இதைச் சொல்ல முடியும்?. தேவர்கள் இந்தப் படைப்புக்கு பிறகு தோன்றியவர்கள். எனவே அவர்கள் அறியார். எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்?

7) இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ, அது இந்தப் படைப்டைத் தாங்குகிறதா? இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ? அவர் கட்டாயமாக இதை அறிவார். ஒரு வேளை அவருக்கும் தெரியாதோ!

(நாசதீய சூக்தம்- ரிக் சம்கிதை- 10/129)

-அ.கா.ஈஸ்வரன்


Share this:

Related posts

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக தான் மத்திய அரசு புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கையை (EIA2020) அவசர அவசரமாகக் கொண்டு வந்ததா???

POONKUZHALI

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

புயலைக் கிளப்பும் (CAG) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நியமனம்.

MANIMARAN M

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI