Newskadai.com
தேர்டு ஐ

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்

Indian Philosophy
Share this:

வேதத் தொகுப்பில் சம்கிதைகள், பிராமணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆரண்யகங்கள் வருகின்றன. இங்கே எளிதாக வேத வரிசைப் படுத்துவது போல் வேத தொகுப்பில் காணமுடியாது. அனைத்தம் இணைந்தும் கலந்தும் முன்னுக்குப் பின்னாகக் காணப்படுகின்றன. பிருகுதாரண்யகம் என்ற பெயர் கொண்டிருந்தாலும் ஒரு உபநிடதத்திற்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சில உபநிடதங்களில் உள்ள தொடக்கப் பகுதிகள் ஆரண்யமா, உபநிடதமா என்aranyakaற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தனிமையில் இருந்து ஆரண்யகங்கங்களைப் படித்தறிய வேண்டும் என்பதனால், இதற்கு ஆரண்யம் என்று பெயர் பெற்றுள்ளது. ஆரண்யம் என்றால் காடு.

சம்கிதை, பிராமணங்கள் தோன்றய சமூகம் மேய்சல் இன மக்களைக் கொண்டிருந்தது. இதன் இறுதியில் விவசாயங்கள் தோன்றின அல்லது விவாசயங்கள் செழுத்திருந்த பகுதிக்கு ஆரியர்கள் வந்தடைந்தனர். இந்த வளர்ச்சி அடைந்த சமூகத்தில் காணப்படும் முரணுக்கு விளக்கும் முகமாகத் தத்துவங்கள் தோன்றின.

முதலாவதாகத் தத்துவத்தைப் படைத்தது சத்ரியர்களே, அதாவது அரசர்களே. பிராமணர்கள் தத்துவ நிலைக்கு வராமல், கர்ம காண்டத்திலேயே மூழ்கியிருந்தனர். பணக்காரர்கள் உழைப்பாளர்கள் என்கிற பிரிவு சமூகத்தில் வலுப்பட்டவுடன் அதற்கு ஏற்ப தேவைப்படுகிற தத்துவத்தைப் பிராமணர்கள் படைத்திடாத காரணத்தால், சத்திரியர்கள் தத்துவ விவாதத்தைத் தொடங்கினர். கர்ம காண்டத்தில் மூழ்கியிருந்த பிராமணர்கள் தத்துவ விவாதத்திற்குத் தொடக்கக் காலத்தில் தடையாக இருந்தபடியால், கர்ம காண்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை உபநிடதப் பகுதியில் காணலாம்.

வேள்வியினைச் செய்பவர்களுக்கு ஜனக மன்னன், தமது தத்துவங்களைக் கூறி குழப்பத்தை விளைவித்தாகச் சதபத பிராமணத்தில் கூறப்பட்டுள்ளது. யாக்ஞவல்கியர் ஜனகனிடம் சென்று தத்தவங்களைக் கற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்து.

பிராமணங்களைப் போன்று வேள்வி வேட்டலைப் பற்றி ஆரண்யகங்களில் பேசப்படவில்லை. வேள்வியினில் அடங்கியிருக்கும் மறைபொருளான தத்துவம் கூறப்படுகிறது. சடங்குகளில் இருந்து தத்துவ நிலைக்கு மாறுவதற்கான, இடையில் ஏற்பட்ட மாற்றங்களை இந்த ஆரண்யகங்களில் காணலாம்.

Brihadaranyaka

ஐதரேய ஆரண்யகம், கௌஷீதகி ஆரண்யகம் ஆகிய இரண்டும் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ண யசுர் வேதத்தில் தைத்திரீய ஆரணியகமும், சுக்ல யசுர் வேதத்தில் சதபதப் பிராமணத்தின் பதினான்காம் பிரிவின் ஆரணியகம் காணப்படுகிறது. சாம வேதத்தில் ஜைமிநீய ஆரண்யகம், சாந்தியோக்கிய உபநிடதத்தின் தொடக்கப்பகுதியில் ஆரண்யகமாக அமைந்துள்ளது.

தைத்ரிய ஆரண்யகத்தில் அமைந்துள்ள மேதா சூக்தம் (4-10) உள்ளுணர்வு வேண்டப்படுகிறது. பால் முதலிய செல்வ வளங்களை வேண்டுதலாகக் கோருவதுடன் உள்ளுணர்வும் வேண்டப்படுகிறது. கர்ம காண்டத்தில் புற உலகப் பொருள்களின் மீது பார்வை செலுத்தப்பட்டது, இங்கே அகத்தை நோக்கிய சிந்தனை செல்கிறது.

“உள்ளுணர்வைத் தருபவளும், நறுமணம்போல் எங்கும் பரவுபவளும், அனைத்தையும் சோதித்தறிய வல்லவளும், பொன்னிற எழுத்துக்களை உடையவளும், என்றென்றும் நிலைத்தவளும், உயர் உண்மைகளைத் தேடுபவர்கள் தொடர்ந்து நாடத்தக்கவளும், வலிமையின் இருப்பிடமானவளும், பால் முதலிய செல்வத்தால் என்னை வளர்ப்பவளுமான மேதா தேவி மலர்ந்த முகத்துடன் வந்து எனக்கு நன்மை செய்யட்டும்” (5)

வேத சம்கிதை காலம் வரை ஆரியர்கள் உருவ வழிப்பாட்டை ஏற்கவில்லை, ஆரண்யகம் தோன்றிய காலத்தில், நாராயணனை ஆயிரம் தலைகளைக் கொண்டவன் என்று பாடப்பட்டுள்ளது. இன்றைக்குக் காணப்படுகிற உருவ வழிப்பாட்டை நோக்கி மாறுகிற கட்டமாக இதைக் கொள்ளலாம்.

தைத்ரிய ஆரண்யகத்தில் அமைந்துள்ள நாராயணச் சூக்தத்தின் (4,10,13) முதல் பாடலில் தான் நாராயணனின் ஆயிரம் தலையைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது. இங்கே நாராயணனை அனைத்துக்கும் ஆதாரமான பிரம்ம நிலைக்கு உயர்த்திப் பாடப்பட்டுள்ளது. மேலும், அனைத்தின் உள்ளும் அந்தர்யாமியாய் இருப்பதையும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கல வடிவினரும், அழிவற்றவரும், சிறப்பாக அறியத் தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன்” (4)

நாராயணனை அனைத்துமான பிரம்மாகக் கருதிய இந்தச் சூக்தத்தில், பிரம்மா, சிவன், விஷ்ணு, இந்திரன் ஆகியோர்களையும் நாராயணனுக்குள் அடக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

“அந்தச் சுடரின் நடுவில் பரமாத்மா வீற்றிருக்கிறார். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன். அவர் அழிவற்றவர். சுய ஒளியுடன் பிரகாசிப்பவர், தனக்குமேல் யாரும் இல்லாதவர்.” (12)

பல்வேறு தெய்வங்களை ஒரே சக்தியாக்கும் முயற்சியாக இதைக் கொள்ளலாம்.

ஆரண்யத்தில் பிரம்மம் பற்றிப் பேசத் தொடங்கினாலும் உபநிடதத்தில் தான் தத்துவதின் வளர்ச்சியைக் காண முடிகிறது.

.கா.ஈஸ்வரன்


Share this:

Related posts

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : யசூர் வேத சம்கிதை

NEWSKADAI

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

இந்திய தத்துவம்-சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை

NEWSKADAI

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI