Newskadai.com
இந்தியா

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

Share this:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டதிலிருந்தே தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது என மத்திய உளவுத் துறை தொடர்ந்து எச்சரிக்கை  விடுத்து வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் அவ்வப்போது தீவிரவாத முகாம்களைக் கண்டறிந்து அதை தகர்த்து  வருகின்றனர். இருப்பினும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதால் அதில் பாமர மக்களின் உயிர் பழியாகிறது என பாதுகாப்பு அதிகாரிகளும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தின் கிரீதி பகுதியில் தீவிரவாதிகளுடன் சி.ஆர்.பி.எப் வீரர்களும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து நடத்திய  சண்டையில் 2 சி.ஆர்.பி.எப் வீரர்களும் 1 போலீஸ் அதிகாரியும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தற்போது லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதி உட்பட 3 தீவிரவாதிகளை காஷ்மீர் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
இதை தொடர்ந்து குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்த பழத்தோட்டத்தில் ராணுவத்தினர் திடீரென தாக்குதலை  நடத்தியுள்ளனர். இதில் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் சோபியான மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் ஓரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். அந்த பகுதியில் இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ராணுவர் தேடுதல் வேட்டையில் இருங்கியுள்ளனர்.

Share this:

Related posts

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M

கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

NEWSKADAI

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI