Newskadai.com
சினிமா

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

Share this:

கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த கோர விபத்து ஓட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு 9 மணி அளவில் பகல் போன்று செட் அமைப்பதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இரவை பகலாக மாற்றுவதற்காக பெரிய விளக்குகளை பொருத்த வேண்டிய பணி நடைபெற்றது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் 150 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, பத்திரிகையாளர் மதனின் மருமகன். 10 பேர் படுகாயமடைந்தனர். லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விபத்து தொடர்பான விசாரணைக்காக நிறுத்தப்பட்டது. விபத்து நடந்த அன்று பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன் அறிவித்திருந்தனர். லைகா நிறுவனமும் நிதி அறிவித்திருந்தது. ஆனால் அந்த தொகை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்றடையாமல் இருந்தது.

மேலும் படிக்க: http://புடவையில் செம்ம கெத்தாக சுற்றும் நயன்தாரா… அழகை வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்…!!

இந்நிலையில், இன்று சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியன் 2 கிரேன் விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் ஹாசன், ஷங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு காசோலைகளை வழங்கினர். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக 90 லட்சம் என மொத்தம் 4 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: http://30 நிமிடத்தில் வீதிக்கு வந்த 3 லட்சம் மக்கள்… லெபனான் வெடி விபத்தின் கொடூர காட்சிகள்…!!

செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், வரும் முன் காப்பது அவசியம், இனி இதுபோன்று நிகழாமல் இருக்க பேசிக்கொண்டிருக்கிறோம். மேலும் கொரோனா காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Share this:

Related posts

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…!!

THAVAMANI NATARAJAN

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA