Newskadai.com
தேர்டு ஐ

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

Share this:

கொரோனா கோவிட்-19 பற்றிய உலகளாவிய, தேசிய அளவிலான, மாநிலம் தழுவிய, மாவட்டம் வாரியான தினசரி அப்டேட்கள் அனைத்து மக்களையும் ஒருவிதமான பயத்தில் வைத்திருந்த நேரம். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு, கோர்ட் உத்தரவு, சிபிஐ விசாரனை, போலிசார் கைது என்ற செய்திகள், தமிழக மக்களின் BP யை எகிரவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று முளைத்தது கந்தசஷ்டி கவசப் பிரச்சனை.

சிறு தீப்பொறியாய் கிளம்பிய பிரச்சனை அரசியல் சூறாவளியால் தீயாக மாறி மக்களை சுட்டது. சிவனேன்னு இருந்த பெரியாருக்கும் முருகனுக்கும் நடுவில் பிரச்சனையை ஏற்படுத்தி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டத்துக்கும் காரணம் சீனா தான்…! என்ன நம்ப முடியலையா..? அடுத்த வரக்கூடியவைகளை படித்து விட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க…

1. சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கிறது, இந்திய இராணுவ வீரர்கள் இருபது பேர் வீர மரணம் அடைகின்றனர்.

2. சீனாவிற்கு எதிரான நடவடிக்கையாக இந்தியா சீன செயலிகளை(Apps) முடக்குகிறது.

3. பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும், ஆதரவான, எதிரான கருத்துக்கள் மீடியாக்களில் பகிரப்படுகிறது.

4. தமிழகத்தில் உள்ள சில செய்தி சேனல்கள் பிரதமருக்கு எதிரானக் கருத்துகளை அதிகமாக கூறியதாக மாரிதாஸ் என்ற நபர் தனது யூ-டியூப் சேனலில் கூறுகிறார். அத்தகைய ஊடகத்தில் பணிபுரிந்த ஒரு சில நபர்களின் பெயர்களையும் தனது யூ-டியூப் சேனலில் தெரிவிக்கிறார்.

5. மாரிதாஸுக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

6. மாரிதாஸால் குற்றஞ்சாட்டப்பட்ட ஊடகவியளாலர்களுக்கு ஆதரவாக கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் செய்தி வெளியிடுகின்றது.

7. இப்படியாக நாட்டோட எல்லை பிரச்சனை, இரண்டு யூ-டியூப் சேனல்களுக்கு இடையிலான பிரச்சனையா மாறுகிறது. இந்த பிரச்சனையில் சம்பந்தம் இல்லாமல் வந்து விழுகிறார் கார்ட்டூனிஸ்ட் வர்மா. கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் கடவுள் மறுப்பு கொள்கைக் கொண்ட திராவிடர் கழகத்தினால் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இந்து சமயக் கொள்கைகளை விமர்சிக்கும் அந்த யூ-டியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளே வரும் கார்ட்டூனிஸ்ட் வர்மா, இனி இந்து தெய்வங்களை விமர்சித்தால் முகமது நபியை இழிவுப்படுத்தி கார்ட்டூன் போடுவேன் என்று பதிவிடுகிறார்.

இவர்கள் பிரச்சனைகளில் முகமது நபி எங்கே வந்தார் என்று குழப்பமாக இருக்கிறதா..? கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் உரிமையாளர்களில் ஒருவராக ஒரு இஸ்லாமியரின் பெயரை ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்  தவறாக பகிர்ந்ததின் விளைவாக கார்ட்டூனிஸ்ட் வர்மா கந்த சஷ்டி கவச பிரச்சனையில் இஸ்லாமியரின் தலையீடு இருப்பதாக நினைக்கிறார். எனவே இந்து மதத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும் முகமது நபியை இழிவுப்படுத்தி கார்ட்டூன் போடுவேன் எனவும் கூறுகிறார்.

8. முகமது நபியை இழிவுப்படுத்தி கார்ட்டூன் போடுவதாக சொன்ன கார்ட்டூனிஸ்ட் வர்மா தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.

9. கார்ட்டூனிஸ்ட் கைதை கண்டித்த பாஜகவினர் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக போலீஸில் புகார் செய்கின்றனர். இங்கு தான் தீப்பொறி தீயாக மாறுகிறது. கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் பல மாதங்களுக்கு முன்பு கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடல் குறித்து வெளியிட்ட ஒரு விமர்சன வீடியோவை ஆதாரமாகக் கொண்டு அந்த யூ-டியூப் சேனலை தடை செய்யுமாறும் அதன் உரிமையாளர்களை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

10. கந்த சஷ்டி கவசம் முருக கடவுளிடம் வேண்டிப் பாடப் படுவதால் முருகனையே அவமதித்ததாக ஹெச்.ராஜா ட்வீட் போடுகிறார். இப்படியாக ஒரு பக்தி பாடல் குறித்த ஒரு யூ-டியூப் சேனலின் விமர்சன வீடியோ பல மாதங்களுக்கு பிறகு பரபரப்பு  அரசியலாக மாற்றப்படுகிறது.

11. கந்தசஷ்டி கவசத்திற்கும் முருகனுக்கும் ஆதரவாக பல அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். கறுப்பர் கூட்டம்  யூ-டியூப் சேனலின் VJ சுரேந்திரன் கைது செய்யப்படுகிறார்.

12. அவர் திராவிடர் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆதரவாக பேசியதைக் கண்டு கொதித்தெழுந்த ஒரு நபர் கடவுள் மறுப்புக் கொள்கையை தமிழகத்தில் விதைத்து சென்ற தந்தை பெரியாரின் சிலைக்கு இரவோடு இரவாக காவி சாயம் பூசுகிறார். இது கோவையில் நடக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு அருகில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்படுகிறது. இப்பொழுது சொல்லுங்கள் தந்தைப் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட சீனா தானே காரணம்…


Share this:

Related posts

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

இந்திய தத்துவம்-சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

NEWSKADAI