Newskadai.com
இந்தியா

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

Lockdown Tamilnadu
Share this:

இந்தியாவில் கோரமுகத்தை காட்டி வரும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதலே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வரை நீடித்து வந்த பொது முடக்கத்தில் அதன் பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதியுடன் லாக்டவுன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அரசு 4ம் கட்ட தளர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Lock down

அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ள மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த முறை தளர்வுகளை அறிவிக்கப்பட்ட போது இ-பாஸ் நடைமுறை ரத்து, இரவுகளில் நடமாட விதிக்கப்பட்ட தடை நீக்கம், ஜிம் மற்றும் யோகா மையங்களை திறக்க அனுமதி என பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதேபோல் இந்த முறையும் பல்வேறு விஷயங்களுக்கு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

  • செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்

  • திறந்தவெளி தியேட்டர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செயல்படலாம்

  • மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசு பிறப்பிக்க கூடாது

  • மாநிலத்திற்குள் மக்கள் சென்று வர எவ்வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது; இ-பாஸ் உள்ளிட்ட நிபந்தனைகள் ரத்து

  • செப்டம்பர் 21 முதல் 100 பேர் மட்டும் பங்கேற்கும் கலாச்சார, பொழுது போக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம்

  • கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாத இடங்களில் 9ம் வகுப்பு

    முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி


  • கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

  • மால்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகளை செப்டம்பர் 30ம் தேதி வரை திறக்க அனுமதியில்லை

  • வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடையும் தொடரும்


Share this:

Related posts

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI

இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..ஒருவர் பலி…! மூவர் படுகாயம்…!

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

“பசு பாதுகாவலர்கள்” என்ற போர்வையில் வெறியாட்டம்… ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் வீடியோ…!!

POONKUZHALI

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M