Newskadai.com
உலகம்

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..!! ஐநாவில் ஆவேச குற்றசாட்டு…

Share this:

ஐநா சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் 45 ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் (sep-14) பதினான்காம் தேதி தொடங்கிய அமர்வு அடுத்த மாதம் (அக்-02) இரண்டாம் தேதியோடு முடிவடைகிறது. இந்த அமர்வில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரி செந்தில்குமார் பங்கேற்று பேசியதாவது, பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் இத்ரீஸ் காணாமல் போய் 9 மாதங்கள் ஆகிவிட்டன. அவர் என்ன ஆனார்? என்று இதுவரை தெரியவில்லை. பத்திரிக்கையாளர்கள் மர்வேயிஸ் சர்மா, அகமது நூரானி மற்றும் புகாரி உள்ளிட்டோர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தடுப்புக் காவலில் இருந்த காஷ்மீர் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்து, கிறிஸ்தவ சிறுமிகள் கடத்தப்படுவது பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் கில்ஜிட், பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் யாரையும் எந்தவித காரணம் இன்றியும் கைது செய்யும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் பாகிஸ்தான் இந்தியா குறித்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதை இந்த மன்றத்தில் எழுப்பி ஐநா மனித உரிமைகள் கவுன்சிலை திசைதிருப்ப முயற்சிக்கிறது. முதலில் பாகிஸ்தான் தன் சொந்த நாட்டில் நடைபெறும் அநீதிகளை, மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். மனித உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று உரையாற்றினார்.


Share this:

Related posts

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M

உலகை அச்சுறுத்த அடுத்த நோய் வந்தாச்சு… சீனாவை புரட்டி எடுக்கும் “புருசெல்லா”…!!

AMARA

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M

#BREAKING அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா… மனைவி மெலனியாவுக்கு தொற்று உறுதி…!!

AMARA

ஒரே நேரத்தில் 20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. இருவர் பலி…

THAVAMANI NATARAJAN

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI