Newskadai.com
தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு 200 சிறப்பு ரயில்கள்… கொரோனா பாதுகாப்புடன் இயங்கும்..!!

Share this:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் பயணிகள் ரயில் சேவையை கடந்த மார்ச் மாதம் 22-ம்  தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளோடு ரயில் சேவையை துவங்கியுள்ளது.

ஊரடங்கு தளவுகளுக்கு பின்பு மெல்ல மெல்ல பயணிகளின் வரவு அதிகரித்து வருகிறது, இந்நிலையில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள உணவகங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது. அடுத்தமாதம் தீபாவளி பண்டிகை  வருவதை கருத்தில் கொண்டு வரும் 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 30 ஆம் தேதிவரை 200 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே யாதவ் தெரிவித்துள்ளார். எனவே ரயில்வே உணவு மற்றும் உணவகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Rail

இது தொடர்பாக ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்.

  • சமைத்த உணவுகள் பார்சல்களாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
  • ரயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்களில் மற்றும் கடைகளில் பயணிகள் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
  • இதுபோன்ற ஓட்டல்கள், கடைகளை நடத்துவதற்கு மார்ச் 23-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டது, இருப்பினும் அவை 20 சதவீத உரிம கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 31-ந் தேதி வரை செயல்பட அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Related posts

“மகனின் மருத்துவ செலவிற்கு பணமில்லை”… வறுமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்…!

MANIMARAN M

நேரடி கண்காணிப்பில் நீர்மட்டம்… பவானி சாகர் அணை பகுதியில் அதிரடி மாற்றம்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M

“அவர் இல்லாம என்னால வாழ முடியாது” – 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம் பெண்…!!!

MANIMARAN M