Newskadai.com
அரசியல்

கொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா ? அலர்ட் ஆகும் அதிகாரிகள்

Share this:

இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பிப்ரவரி இடையில் கொரோனாவின் 2வது அலை தாக்கியதில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2வது அலையின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதிலும் உயிரிழப்புகள் அதிகரித்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததுடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு, சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாடு என பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. வட மாநிலங்களில் கொத்துக் கொத்தாக சடலங்கள் எரிக்கப்பட்டன. கொரோனாவின் 2வது அலையின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைள் எடுத்தன. தமிழ்நாடு உட்பட பாதிப்பு மிகுந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் நாளொன்றின் பாதிப்பு 35 ஆயிரமாக இருந்தது. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக படிப்படியாக பாதிப்புகள் குறைய தொடங்கின.

இந்த நிலையில் கொரோனாவின் 3-வது அலையும் உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2வது அலையை போலவே 3வது அலையும் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3வது அலை உருவானால் அதனை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனாவின் 3-வது அலை வந்தால் அதை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் 20 பயிற்சி குழுக்கள் அமைக்கப்படுகிறது. இதில் நோய் தடுப்பு நிபுணர்கள், சிறப்பு டாக்டர்கள் இடம் பெறுகின்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் கீழ் ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு தேவையான பயிற்சிகள் முன்கூட்டியே அளிக்கப்படும். நோய் பரவல் தொடங்கியதும் இந்த குழுக்கள் விரைவாக செயல்பட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும். இதற்காக கூடுதலாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், தேவையான மருத்துவ சாதனங்கள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் இடம்பெற்றவர்கள் விரைவாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மருத்துவ பணியாளர்கள் தட்டுப்பாட்டை போக்குவதற்காக மருத்துவத் துறையில் உள்ள மற்ற நபர்களுக்கும் தடுப்பு நடவடிக்கை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.


Share this:

Related posts

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

மக்களின் மீதான பொருளாதார வேட்டை : ரத்தத்தை உறிஞ்சும் அரசுகள் – ஸ்டாலின் கடும் தாக்கு….!!

MANIMARAN M

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

AMARA

காங்கிரஸ்க்கு அடிமேல் அடிகொடுக்கும் பஞ்சாப்.. ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து :

NEWSKADAI