Newskadai.com
இந்தியா

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

Share this:

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனிகா இணைந்து தயாரித்து பரிசோதனை செய்து வரும் கொரோனா தடுப்பு ஊசி மீது உலகமே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது. இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா நாட்டு மக்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெகு விரைவில் இந்த மருந்து உலகம் முழுக்க மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று உலகத் தலைவர்கள் நம்பி வந்த நிலையில் திடீரென ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனையை நிறுத்தி வைப்பதாக செய்திகள் வந்துள்ளன. இரண்டாம் கட்ட பரிசோதனையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தடுப்பூசி பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த தடுப்பு மருந்துக்கான இரண்டாம் கட்ட சோதனை இந்தியாவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட 17 மையங்களில் இந்தியா முழுவதும் 1600 பேருக்கு இந்த தடுப்பு மருந்தின் சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பு சோதனை நடத்துவதை நிறுத்தவேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் ஆய்வில் ஈடுபடும் மருந்து தயாரிக்கும் செரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share this:

Related posts

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…!!

MANIMARAN M

விவசாயத்திற்கு எதிரான வேளாண் திட்ட மசோதாக்களை நாடு ஒருபோதும் அனுமதிக்காது – ராகுல் காந்தி

MANIMARAN M

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

MANIMARAN M