Newskadai.com
விளையாட்டு

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

Share this:

கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் நடந்த 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் பஹ்ரைன் அணி 3 நிமிடங்கள் 11 நிமிடங்களில் வந்து தங்கம் வென்றது. இந்திய அணி 3 நிமிடங்கள் 15 வினாடிகளில் எல்லையை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் ஓடும் போது அவருக்கு வழிவிடாமல் பஹ்ரைன் வீராங்கனை இடையூறு செய்தார் என்று இந்தியா சார்பில் அப்பொழுதே நிர்வாகத்திடம் புகார் எழுப்பப்பட்டது. ஆனால், அந்த புகாரை நிர்வாகம் நிராகரித்து விட்டது.


இந்நிலையில் பஹ்ரைன் அணியில் ஓடிய கெமி அடிகோயா எனும் வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு போட்டியில் ஓடியது கண்டு பிடிக்கப்பட்டதால், அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் பஹ்ரைன் அணி தகுதிநீக்கம் செய்யப்பட்டு தங்க பதக்கம் பறிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்துடன் முதலிடமும், மூன்றாவது இடம் பெற்றிருந்த கஜகஸ்தான் அணிக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்படுவதாக ஆசிய விளையாட்டுப் போட்டி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 400 மீட்டர் மகளிருக்கான தடை ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்த பஹ்ரைன் வீராங்கனை அடிகோயாவின் பதக்கமும் பறிக்கப்பட்டது. இதனால் அப்போட்டியில் நான்காவது இடம் பிடித்த இந்திய வீாரங்கனை அனு ராகவன் மூன்றாவது இடத்துக்கு உயர்த்தப்பட்டு, அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


“இந்த செய்தி தற்பொழுது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்து டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரியமாகத் தயாராக வைக்கும்” என இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

13 வது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்குகிறது…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI