Newskadai.com
தமிழ்நாடு

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

Share this:

தமிழகத்தில் டெல்டா பாசன பகுதிகளில் கடந்த வாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது, நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 563 கன அடியாக உயர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 92.37 அடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தண்ணீரின் அளவானது பாசன தேவைக்கு ஏற்றவாறு திறந்து விடப்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடபட்டு வந்த நிலையில், நேற்று 15 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டு வருகிறது, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைந்து வருகிறது.


Share this:

Related posts

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

MANIMARAN M

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

THAVAMANI NATARAJAN

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M