Newskadai.com
தமிழ்நாடு

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

Share this:

ஈரோடு அருகே கோபிச்செட்டிபாளையத்தில் உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வாராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ராயல் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் என்ற பெயரில் உர விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்துள்ளனர்.

ஈரோடு மற்றும் கோவையைச் சேர்ந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சோமசுந்தரம் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் நேற்று சோமசுந்தரம் மின்நகர் பகுதியில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததாகவும், அந்த தொகை 12 பேருக்கு பிரித்து கொடுக்க வேண்டியது என கூறப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெறுவோம் என்றும் சோம சுந்தரம் தரப்பில் கூறப்பட்டது. தற்போது சோதனை நிறைவடைந்த நிலையில், பணம் கைப்பற்றப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI