Newskadai.com
அரசியல்

சசிகலாவிற்கு அடுத்த ஆப்பு… ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை…!

Sasikala release
Share this:

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவர் விடுதலையானால் ஏற்கனவே சிக்கலில் உள்ள அதிமுக இரண்டாக உடையும் என வதந்தி பரவியது. ஆனால் சசிகலாவின் வியூகங்களில் மண் அள்ளி போட்ட மாதிரி,இபிஎஸ் – ஓபிஎஸ் டீம் இடையே சமாதானம் மலர்ந்துவிட்டது. அதுமட்டுமின்றி 2021ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்தாகிவிட்டது.

அந்த அதிர்ச்சியில் இருந்து சசிகலா வெளியே வருவதற்குள், வருமானத்துறை அவர் தலையில் மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது. அதாவது சசிகலாவுக்கு சொந்தமான இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. 2017ம் ஆண்டு சசிகலாவிற்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிகிறது.

சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உட்பட பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

முதல்வர் வேட்பாளர் யார்..? 6 ஆம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் தலைமைக்கழகம் வர உத்தரவு…

MANIMARAN M

விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவிற்கு கொரோனா… அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

AMARA

வேட்பாளர்களின் “தேர்தல் செலவுக்காக”… கமல் ஹாசன் எடுத்த ‘அதிரடி’ முடிவு…!

MANIMARAN M

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!!

MANIMARAN M

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI