Newskadai.com
அரசியல்

3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்த பாஜக அரசு

Share this:

ஞாயிறன்று மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி எம்பிக்கள் சிலர் சட்ட மசோதா நகல் கிழிப்பு,மைக் உடைப்பு போன்ற அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவ்வாறு செயல்பட்ட 8 எம்பிகளை மாநிலங்களவைத் தலைவர் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவை புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையில் பாஜக எம்.பி.க்கள், மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ( ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி) எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாக்களின் மீது எந்தவித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் விவரம் பின்வருமாறு:

  1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா.
  2. புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐஐடிக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா.
  3. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா (கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மசோதா ).
  4. குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா.
  5. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா.
  6. ராஷ்ட்ரிய ராகாஷ் பல்கலைக்கழக மசோதா.
  7. வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா.

Share this:

Related posts

#GoBackModi தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்.!!!

MANIMARAN M

அடுத்த வாரத்திலிருந்து அரசியல் சதுரங்கம் ஆரம்பம்… விடுதலை ஆகிறார் சசிகலா…!?

MANIMARAN M

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA