Newskadai.com
தமிழ்நாடு

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

Share this:

தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லம் கிராமத்தில் வள்ளலார் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (40). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டுவதற்காக அதே ஊரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதில் வங்கிக்கு வேண்டிய கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வங்கியிலிருந்து நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனே செலுத்தும்படி ஆனந்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று சிட்டி யூனியன் வங்கிக்குச் சென்ற ஆனந்த் வங்கி மேலாளரிடம் கொரோனா காரணத்தால் வருமானம் இல்லாமல் இருப்பதாகவும், அதனால் பணம் செலுத்துவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் வழங்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால் வங்கியிலிருந்து எந்த அவகாசமும் தர முடியாது, நிலுவையில் உள்ள பாக்கித் தொகையை உடனே திருப்பிச் செலுத்த வேண்டும் இல்லையென்றால் வீட்டை ஏலம் விட்டு விடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து வங்கியிலிருந்து வெளியில் வந்த ஆனந்த் வங்கி வாசலிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவலறிந்து வந்த மனைவி ஹேமா மற்றும் அவரது இரண்டு மகன்களும் கதறி அழுதனர். சம்பவம் அறிந்து வெளியில் வந்த வங்கி அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீக்குளிப்பினால் அதிக படுகாயம் அடைந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this:

Related posts

தடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…!!

THAVAMANI NATARAJAN

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M

#coronavirus தினந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கும் இறப்பு எண்ணிக்கை- இன்றைய கொரோனா நிலை..!!

NEWSKADAI

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI