கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்துள்ளதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஜீன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் நவம்பர் மாதம் திறப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இது பொய்யான தகவல் என பள்ளி கல்வி துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளின் சேட்டைகளை கட்டுப்படுத்த முடியாதா பெற்றோர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்களை விட அவர்களின் பொற்றோர்கள் எப்போது கொரோனா பாதிப்பு முடியும் எப்போது பள்ளி திறக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்ப்பாக்கின்றனர்.ஆனால் தொற்று அதிகமாக பரவி வருவதை தொடர்ந்து மிகவும் வருத்தில் உள்ளனர்.
மேலும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்தல் முடிவு வெளிவந்ததுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனைகள் செய்ததில் அவர்கள் கூறியதாவது;
கொரோனா தொற்று முழுமையாக நீங்காமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக இல்லை என்றும். ஒரு சிலர் பள்ளிகளை திறப்பதற்கு எந்த விதமான முன்னெச்சரிக்கையான நடவடிக்கையை எடுக்க போகிறீர்கள் என்ற கேள்வியையும்
வினாவினர்.
பள்ளி கல்வி துறையானது நவம்பர் மாதம் பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது. மேலும் சூழ்நிலை சரியான பிறகுமுதலமைச்சர் அவர்கள் பள்ளி திறப்பதை பற்றி அறிவிப்பார் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.