Newskadai.com
இந்தியா

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…!!

Share this:

கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 48 பேர் மீது குற்றம் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் இறுதிக்குள் இந்த வழக்கை நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 16 பேர் இறந்தவிட்ட நிலையில், மீதமுள்ள 32 பேரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டனர். தொடர்புடைய அனைவரும் வாக்குமூலம் தந்துவிட்டதால் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருப்பதாக வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் கூறியுள்ளார். மேலும் தீர்பளிக்கும் நாளில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். வர இருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் வட்டாரம் மற்றும் பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share this:

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

N-95 மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது… அதிர்ச்சி தகவல்…!!

NEWSKADAI

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M