Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் முதியவர்களை முழு வீச்சில் தாக்கும் கொரோனா… மருத்துவர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை…!!

Aged people
Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலத்தை பொறுத்தவரை முதியவர்கள் இந்த கொடூர வைரஸால் அதிக அளவில் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சேலத்தில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அதிக அளவில் அடங்குவர்.

Aged people

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. ஆட்சியர் ராமன் உத்தரவின் படி நாளை வரை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. நகரப்புறங்களில் இப்படி என்றால் கிராமப்புறங்களில் விருந்து, திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோருக்கு கூட்டம் கூட்டமாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்டோருக்கும், ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Aged people

சேலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்பதையும், தேவையில்லாமல் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டுமென அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Share this:

Related posts

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN