Newskadai.com
தமிழ்நாடு

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அதிக அளவில் அடங்குவர்.

கடந்த வாரம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. நகரப்புறங்களில் இப்படி என்றால் கிராமப்புறங்களில் விருந்து, திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோருக்கு கூட்டம் கூட்டமாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்டோருக்கும், ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : http://ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

சேலத்தில் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று இன்று உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் இதுவரை ஒற்றை இலக்கத்தில் 1, 2 என்று இருந்த பலி எண்ணிக்கை இன்று மட்டும் 10 பேர் கொடுந்தொற்றால் பலியாகியுள்ளனர் என்பது சேலம் மக்களை கொரோனா பீதியில் குலைநடுங்க வைத்துள்ளது. இதுவரை 156 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். அரசு இன்றிலிருந்து ஊரங்கில் பல தளர்வுகளை செய்துள்ள நிலையில் தொற்றின் வீரியம் அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.


Share this:

Related posts

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

THAVAMANI NATARAJAN

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN