Newskadai.com
அரசியல்

இன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…

Share this:

கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக பெரும் புயலை எழுப்பி வந்தார் துணை முதல்வர் சச்சின் பைலட். கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலையிட்டு இப்பிரச்சனையில் சச்சின் பைலட்டை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் தனது ஆதாரவாளர்களுடன் மீண்டும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் இணைந்து செயலாற்ற உறுதியளித்துள்ளார். அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு வர இருந்த நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடுகிறது.

சட்டசபையின் முதல் நாள் அன்றே முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனடிப்படையில் கடந்த ஒரு மாதமாக இழுப்பறி நிலையில் இருந்து வந்த ராஜஸ்தான் அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளது. மத்தியபிரதேச பாணியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து ராஜஸ்தானிலும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று அரசியல் வல்லுநர்களின் கருத்து முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Share this:

Related posts

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

AFRIN

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

MANIMARAN M

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபடும் கோவை மக்கள்..!

MANIMARAN M

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI

தமிழக பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் கமலாலயம்…!

AMARA