Newskadai.com
தமிழ்நாடு

இந்த மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமைச் செயலாளர் அபாய எச்சரிக்கை…!!

Share this:

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பெருந்தொற்று கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழப்பு, வேலையின்மை போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பொது மக்கள் நலன் கருதி பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து தலைமை செயலாளர் சண்முகம் கூறுகையில்,

Aged people

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கோவை, சேலம், நாகை, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 15 நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து உச்சத்தை தொடும் எனக் கூறினார். மேலும் அந்த 5 மாவட்டங்களிலும்  மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தூக்கத்தில் நடந்த துயரம்: குடிசை வீட்டில் பயங்கர தீ விபத்து…!!

MANIMARAN M

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

NEWSKADAI

‘குடி’மகன்களுக்கு குஷியான செய்தி…. சென்னையில் டாஸ்மாக் திறப்பு குறித்து அதிரடி அறிவிப்பு…!!

AMARA

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடி… கொரோனாவால் பல கோடிகளை இழந்த முக்கிய துறை…!!

THAVAMANI NATARAJAN