Newskadai.com
தமிழ்நாடு

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

Share this:

கொரோனா பெரும் தொற்றையும் பொருட்படுத்தாமல் நீட் தேர்வே நடந்தே தீரும் என மத்திய அரசு அறிவித்தால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டனர். இந்த ஆண்டு நீட் தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் நலனை விட கல்வி கொள்கையே முக்கியம் என முடிவு செய்த மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி உத்தரவிட்டது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் பல மடங்கிற்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த முருகசுந்தரம் என்ற காவல்துறை எஸ்.ஐ.யின் மகள் ஜோதி துர்கா(19). நீட் தேர்வுக்காக தயாராகி வந்த இவர், மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் படிப்போரையும், பார்ப்போரையும் கனத்த சோகத்தில் மூழ்கடிக்கிறது.

ஜோதி ஸ்ரீ துர்காவின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த கொஞ்ச நேரத்திலேயே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாளை தனது சொந்த ஊரில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், தேர்வு பயம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தைரியத்துடன் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Mothilal

ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீள்வதற்குள், சற்று நேரத்திற்கு முன்பு மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவன் நீட் தேர்விற்காக தயாராகி வந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M