Newskadai.com
தமிழ்நாடு

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

Theft
Share this:

நாமக்கல், இந்திரா நகரை சேர்ந்தவர் பொற்கோ (56 ). நாமக்கல்லில் டயர் டீலர் கடையும், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில், இன்டேன் காஸ் ஏஜன்சியும் நடத்தி வருகிறார். புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இறுதி சடங்கு நிகழ்விற்கு குடும்பத்துடன் சென்றிருந்த பொற்கோ இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டியிருந்த அவரது வீட்டின் வெளி கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பொற்கோ நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

#CORONAVIRUS : ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் பாதிப்பு, பலி எண்ணிக்கை நிலை..!!

NEWSKADAI

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…

NEWSKADAI