Newskadai.com
தமிழ்நாடு

நள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்… பதறியடித்து போய் பார்த்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

theft
Share this:

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பால்ராஜ். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டினுள் ஏதோ சப்தம் கேட்டு எழுந்துச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சப்தம் வீட்டினுள்ளிருந்து வந்துக் கொண்டிருந்தமையால் உள்ளே சென்ற பால்ராஜுக்கு மேலும் அதிர்ச்சி, மர்ம நபர்கள் அங்குள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட பால்ராஜ் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் கொள்ளையர்கள் பால்ராஜை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பால்ராஜின் கை முறிந்துள்ளது. இதனால அலறிய பால்ராஜின் குரல் கேட்டு மனைவி விஜயா எழுந்து வந்து கொள்ளையர்களிடமிருந்து கணவனைக் காக்க போராடியுள்ளார். இதற்கிடையில் பீரோவில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஒட எத்தனித்துள்ளனர். விஜயாவின் கழுத்தில் தங்க சங்கிலி இருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் அதையும் பறிக்க முயன்றுள்ளனர். சங்கிலியை பறிக்க விடாமல் போராடியதில் விஜயாவின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் விஜயாவின் கழுத்திலிருந்து பாதி சங்கிலி அறுப்பட்டு கொள்ளையர்களிடம் சென்றது.

கணவன் மனைவியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதையறிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களே உஷார்… கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை…!!

THAVAMANI NATARAJAN

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

இந்த மாவட்டங்களில் மட்டும் அடங்காத கொரோனா… தமிழகம் முழுக்க இன்றைய நிலை..!!

NEWSKADAI

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN