Newskadai.com
இந்தியா லைஃப் ஸ்டைல்

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

Share this:

தமிழகத்தில் இன்று சைக்கிள் என்பது உடற்பயிற்சி கருவியாக மாறிவரும் நிலையில் மத்தியப் பிரதேசம் தொழிலாளி ஒருவர் தனது மகன் தேர்வெழுதுவதற்காக 105 கி.மீ சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், பைதிபுரா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஷோபாராம், தனது மகன் ஆஷிஷை 105 கி.மீ தூரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு ஏழு மணி நேரத்தில் அழைத்து சென்றார். இது குறித்து ஆஷிஷ் தந்தி ஷோபாராம் கூறுகையில், எனது மகன் ஆஷிஷ் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினான். ஆனால் தேர்ச்சி பெறவில்லை.

இருப்பினும், மாநில அரசின் “ருக் ஜனா நஹி” திட்டத்தின் கீழ், 10 மற்றும் 12 ஆம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதலாம். அந்த திட்டத்தின் கீழ் எனது மகன் தேர்வு எழுத முடிவு செய்தான். ஆனால் இதற்கான தேர்வு மையம் 105 கி.மீ தொலைவில் உள்ள தார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்த தேர்வை என் மகன் எழுதவில்லை என்றால் அவனுக்கு ஒரு வருடம் வீணாகி விடும். எங்களிடம் பெரும் வசதியும் இல்லை, மோட்டார் சைக்கிளும் இல்லை, பொது போக்குவரத்து இயங்காமல் இருந்த நிலையில், மகனை சைக்கிளில் அழைத்துச் சென்று தேர்வெழுத வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

தந்தையின் இப்பெரும் அர்ப்பணிப்பு குறித்து கூறுகையில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நான், எனக்கு கிடைக்க இருக்கும் அடுத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. நான் தார் மாவட்டம் சென்று தேர்வு எழுத வேண்டும் என்று என் தந்தையிடம் வலியுறுத்தினேன், பேருந்து போக்குவரத்து இல்லாத சூழலால் என்னை சைக்கிளில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்வதாக என் தந்தை கூறினார், ”என்று கூறினார் ஆஷிஷ்.

ஷோபாராம் தனது மகனை சைக்கிளில் அழைத்து செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தான் கல்வி கற்காதவர் என்றாலும் தனது மகனுடைய கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்த அர்ப்பணிப்புள்ள தந்தையின் காணொளி, தனது மகனுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கொண்டது என்று சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இதைத் தொடர்ந்து மஹிந்த்ரா குழுமத் தலைவர், ஷோபராம் ஒரு வீரம் நிறைந்த அர்ப்பணிப்புள்ள தந்தை. தமது குழந்தைகளின் எதிர்காலத்தை பெரிய அளவில் கனவு காண்பவர்கள். இவர்கள் போன்றவர்களே நாட்டின் முன்னேற்றத்திற்கு தூண்டுக்கோலாய் இருப்பவர்கள். இவருடைய மகன் ஆஷிஷின் உயர்கல்வியை தங்கள் அறக்கட்டளை ஏற்கும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

7 மாத குழந்தையையும் விட்டு வைக்காத காவல்துறை… தலித் விவசாயி மீது நடந்த கொடூர தாக்குதல்…!

NEWSKADAI

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN