Newskadai.com
தமிழ்நாடு

ஊரையே அலங்கோலமாக்கிய ஒற்றை யானை… மக்கள் அலறியடித்து ஓட்டம்..!!!

Elephant
Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரை மிதித்து கொன்றதால் கர்நாடக வனத்துறையினர் அங்கிருந்து ஒசூர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். ஒசூரில் யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் ஒசூர் சுற்று வட்டார பகுதியில் நான்கு பேரை கொன்றுள்ளது.

இந்த நிலையில் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று முன்தினம் இரவு தேன்கணிக்கோட்டை அருகே உள்ள  திம்மசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது. கடும் ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் வந்த காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Elephant

ஒரு வீட்டின் அருகில் விவசாயிகள் தக்காளி கூடைகளை மினி வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த யானை அங்கிருந்த தக்காளி கூடைகளை கால்களால் மிதித்து சேதப்படத்தியுள்ளது. மேலும் அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்து பயிரிடப்பட்டிருந்த தக்காளி, வாழை ஆகிய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானையை விரட்டினார்கள்.


Share this:

Related posts

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

NEWSKADAI

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

நாகையில் அர்ச்சகர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை… 40 சவரன் நகைகள் திருட்டு…!!

MANIMARAN M

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

THAVAMANI NATARAJAN

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN