கொரோனா லாக்டவுன் காலத்தில் சோறு, தண்ணி கிடைக்காமல் அலைபவர்களை விட சரக்கு கிடைக்காமல் அலையும் ‘குடி’மகன்கள் தான் அதிகம். எப்படியாவது பிளாக்கிலாவது சரக்கை வாங்கி குடித்தே தீர வேண்டும் என்று வெறியில் ஏராளமானோர் அலைகின்றனர். தமிழ்நாட்டில் கூட போதைக்காக சானிடைசர், வார்னிஷ் என பலவற்றையும் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்த செய்திகளை படித்திருக்கிறோம். அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் விதமாக ஹரியானாவில் ஒரு போதை ஆசாமி செய்த பலே காரியம், புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.
கஞ்சா எதும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட ஹரியானவைச் சேர்ந்த ஒருவர் கத்தியை விழுங்கியுள்ளார். இதணை யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் ஒன்றை மாதமாக உடல் உபாதையினால் சிரமப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை மாதத்திற்கும் வலியை சமாளித்து வந்துள்ளார். இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வயிற்று வலியால் மிகவும் தவித்த அவரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இதனை அடுத்து அவரது வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுக்கையில் கல்லீரலில் கத்தி இருந்தது தெரியவந்துள்ளது. கல்லீரலில் பதிந்திருந்த 20 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தியை 3 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.