இவ்வாண்டு தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது எப்போது என்று தெரியாமல் தவித்த பெற்றோர்களுக்கு தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து வெளியிட்ட தகவல்கள்.
- பள்ளிகள் திறக்கப்படுவதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை.
- தனியார் பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி மாணவர் சேர்க்கை இணையம் மூலம் நடைபெறும்.
- தமிழக அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்நடைபெறும்.
- பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட்24 ஆம் தேதி தொடங்கும்.
- ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 17 முதல் மாறிக் கொள்ளலாம்.
- மாணவர் சேர்க்கை நடைபெறும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.
- மீண்டும் பள்ளி திறக்கும் வரை தொலைக்காட்சி வழி, இணைய வழி கல்வி தொடரும்.