Newskadai.com
தமிழ்நாடு

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும் தண்டனை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!!

Share this:

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டு தரக்கோரிய ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் அந்த மாணவி திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழிற்சாலையில் வேலைப் பார்த்து வருவதாக அந்த மாணவியை காணொலி மூலம் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பெரும்பாலும் ஏற்கனவே மணமான ஆண்களை திருமணம் செய்துக் கொண்டு துன்புறுத்துலுக்கு ஆளாவதைக் காண முடிகிறது. எனவே திருமணமானதை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யக் கூடிய ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் இதுபோல் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் மணமான ஆண்களை திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது எத்தனை என்றும், திருமணமானதை மறைத்து பெண்களை ஏமாற்றியவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கே இந்த நிலையா?… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

NEWSKADAI

குப்பைத் தொட்டியில் வெள்ளிக் கிரீடம் : தூய்மை பணியாளரின் நேர்மை..!!!

MANIMARAN M

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

MANIMARAN M

வேலூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக்கொலை…!!

THAVAMANI NATARAJAN