Newskadai.com
இந்தியா

நதிநீர் பங்கீடு: கேரள – தமிழக அரசுகள் இடையே முக்கிய ஆலோசனை…!!

Share this:

தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களும் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் 12ஆம் தேதி இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தமிழக தலைநகர் சென்னையில் நடத்தியது. கொரோனா (Covid-19) தொற்று காரணமாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தாமதமானது.

இந்நிலையில் நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் கேரள குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இன்றைய தினம் நடக்கும் பேச்சு வார்த்தையில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு நல்லாறு அனைத்து திட்ட ஒப்பந்தம் மறு ஆய்வு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. சிறுவாணி அணை குறித்தும் பாண்டியாறு புன்னம்புழா திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றது Paytm…

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M