Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

கரையை நெருங்கும் யாஸ் – 2 மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட்

Share this:

அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு எச்சரிக்கையை குறிக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. யாஸ் புயல் என பெயரிடப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதிதீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யாஸ் புயலின் எதிரொலியாக தமிழகத்திலும் ராமேஸ்வரம், அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை மையத்தின் தேசிய முன்னறிவிப்பு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

AMARA

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்…!!

MANIMARAN M

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI