Newskadai.com
சினிமா

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

Share this:

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், நடிகர் விஜய் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையன் எஸ்.பி.பி. உடல் பண்ணை வீட்டில் புதைப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பி-யின் நீண்ட கால நண்பரான இளையராஜா திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் அங்கு எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் வழிபாடு நடத்தினார். எஸ்.பி.பி – இளையராஜா கூட்டணியில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

அக்.30-ல் நடிகை காஜல் அகர்வாலுக்கு ‘டும்டும்டும்’ … மாப்பிள்ளை இவர் தான்…!

NEWSKADAI

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

AMARA

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

அப்போ சூப்பர் ஸ்டார் மகள் மேல ‘லவ்’ இல்லையா?… தனுஷ் குடும்பத்தில் குண்டு வைக்கும் நெட்டிசன்கள்…!

THAVAMANI NATARAJAN

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

“பிஎம் நரேந்திர மோடி” – அக்டோபர் 15-ல் செகண்ட் ரிலீஸ்

MANIMARAN M