Newskadai.com
சினிமா

இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

Share this:

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தனது ரெக்கார்டிங் பணிகளை கடந்த 42 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார். இளையராஜாவின் திறமைக்கான மரியாதையாக பிரசாத் ஸ்டுடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத் அதனை அவருக்கு வழங்கினார். ஏ.எல்.பிரசாத் மகன் நிர்வாகித்த போது இளையராஜா அந்த ஸ்டிடுயோவை பயன்படுத்தி தான் வந்தார். ஆனால் 2019ம் ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய்பிரசாத் பெறுப்பேற்ற பிறகே சிக்கல் ஆரம்பித்தது.

மேலும் படிக்க:http://இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

அந்த ஸ்டுடியோவை இடித்துவிட்டு புதிய தியேட்டர் கட்ட உள்ளதாக கூறிய சாய் பிரசாத், தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை செய்து வந்தார். இதனிடையே இளையராஜாவின் அறைக்கு பூட்டு போடும் அளவிற்கு ஸ்டுடியோ நிர்வாகம் செல்ல, இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் படிக்க:http://சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

இதுகுறித்து சாலிகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்த இளையராஜா நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார், மேலும் இளையராஜா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமரச தீர்வு அளித்தது. இந்நிலையில் இன்று இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

 

அதில், சாய் பிரசாத் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பிரச்சனைகள் தருவதாகவும், பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் லட்சக்கணக்கான இசைக்கருவிகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் இருக்கும் ரெக்காடிங் தியேட்டருடைய சேர்களும் சேதப்பட்டிருப்பதாகவும், அந்த அறையின் சாவிகள் தன்னிடம் இருக்கும் போது அறையை உடைத்து அதில் இருக்கும் தனது இசை குறிப்புகளை திருடிவிற்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனது இசை குறிப்புகளை சேதப்படுத்திய சாய் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

சுஷாந்த் சிங் மரண வழக்கு… அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்…!!

AMARA

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA