Newskadai.com
சினிமா

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

SPB
Share this:

ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல பிரபலங்களையும் ஆட்டம் காண வைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிக்கியுள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி-யின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடையில் எஸ்.பி.பி. கண் விழித்து விட்டதாக மகிழ்ச்சியான செய்தி வெளியானாலும், மீண்டும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது.

இதனால் திரைத்துறையினர், ரசிகர்கள், குடும்பத்தினர் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இயக்குநர் பாராதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,. எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டி நாளை (20-8-2020(வியாழக்கிழமை)) மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு ஒரு நிமிடம் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை திரைத்துறையினர் பலரும் ஆதரித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு எஸ்.பி.பி. உடல் நலம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை ஒன்றை போட்டுள்ளார்.

Simbu

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும்.

நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்… என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது. இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர். இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம். லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் 'பாடும் நிலா' எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்… அன்புடன் உங்கள் சிலம்பரசன் TR

A post shared by Riaz K Ahmed (@riazkahmed.pro) on

 


Share this:

Related posts

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

நான் முஸ்லிம் என்பதால் கற்பழிப்பேன் என மிரட்டுவதா?… பிரதமரிடம் நியாயம் கேட்டு கொந்தளித்த குஷ்பு…!!

MANIMARAN M

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

சொன்னதை செய்து காட்டிய சூர்யா… “சூரரைப் போற்று” ரூ.5 கோடியிலிருந்து சினிமாத்துறைக்கு முதற்கட்ட நிதியுதவி…!!

AMARA

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA