Newskadai.com
உலகம்

எல்லாத்தையும் ஓப்பன் பண்ணிடாங்கன்னு ஆடாதீங்க… இதுக்குமேலதான் பாக்கபோறீங்க கொரோனாவோட ஆட்டத்த…!! எச்சரிக்கும் உலக சுகாதர அமைப்பு..!!

Share this:

சீனாவின் வூஹான் நகரில் கடந்த வருடம் முதன் முதலில் COVID-19 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நோய்த் தொற்று அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இன்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப்போய் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் பல மாதங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த கடும் ஊரடங்கில் செப்டம்பர் 1 முதல் பல தளர்வுகளை வெளியிட்டு மக்களை ஆசுவாசப்படுத்தின மத்திய மாநில அரசுகள். உலகில் பல நாடுகளும் வர்த்தகம் பாதிக்கப்படக் கூடாது என்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்றும் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதாணோம், கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தையும் திறந்துவிட்டிருப்பது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

Corona virus

அவர் காணொளி மூலம் கூறியிருப்பதாவது, நாம் அனைவரும் COVID19 கொரோனா தொற்றுநோயால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடக்கின்றோம். மக்கள் அனைவரும் வேலையின்மை, வருமானமின்மை காரணமாக சோர்வடைந்துள்ளனர். மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கையத் தொடரவே அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறனர். ஆனாலும் எந்த நாடும் கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், முற்றிலும் ஒழிந்துவிட்டதாகவும் எண்ணி செயல்படமுடியாது.

கொரோனா வைரஸ் எளிதில் பரவுகிறது. அதன் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவது குறித்தே நாம் அனைவரும் தீவிரமாக யோசித்து செயல்பட வேண்டும். எந்தளவிற்கு வர்த்தகத்தை திறக்க வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படுகின்றோமோ அதே அக்கறையுடன் வைரசை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் இது பேரழிவுக்கு கொண்டுச் செல்லும். இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நெருங்கிய தொடர்புகளை தவிர்க்க வேண்டும், நெரிசலைத் தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்பட்டால் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், முக்கியமாக ஒவ்வொருவரும் தம் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்பெருந்தொற்று காலத்தில் அதன் தீவிரத்தை உணராமல் நாம் செயல்பட்டால் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.


Share this:

Related posts

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI

முற்றும் அமெரிக்கா – சீனா பனிப்போர்… தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு…!

NEWSKADAI

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

MANIMARAN M

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M