Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

Share this:

திட்டமிட்டபடி NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் என்ற தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பிற்கு பிறகு நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மத்திய அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் NEET மற்றும் JEE தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தனர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்” என்று அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சுகாதரத் துறை அமைச்சர் விஜபாஸ்கர் கடிதம் எழுதியதைக் குறித்து, “சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்” என்று அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.


Share this:

Related posts

இருவரின் கைப்பாவையாக மாறிய கமல்… மநீம-வில் இருந்து விலகிய முருகானந்தம் பகீர் குற்றச்சாட்டு…!

AMARA

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M

மனக்குழப்பம், தலைவலியை குணமாக்கும் அர்த்த சின் முத்திரை

NEWSKADAI

மகிழ்ச்சி செய்தி..! நாளை முதல் ரூ.2,000 வழங்கப்படும்

AFRIN

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’!!

POONKUZHALI