Newskadai.com
இந்தியா

“அவனே கொலைகாரன்; அவனே வழக்கு தொடுப்பவன்” அப்படி என்றால் இதுதான் நீதி… விளாசும் ஓவைசி…!!

Share this:

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிஞர்கள் ஊடகவியலாளர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபர் மசூதி இடிப்பு மிக மோசமான செயல் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், இப்போது சிறப்பு நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு இந்துத்துவா மற்றும் இந்துத்துவாவை பின்பற்றுபவர்களின் கூட்டு உணர்வை திருப்திப்படுத்துகிறது. இந்த தீர்ப்பின் அர்த்தம் என்ன? யாருமே குற்றவாளிகள் இல்லை என்றால், பாபர் மசூதியை இடித்தது யார்? பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பதிவில் பிரபலமான உருது வாக்கியம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் பொருள் “கொலைகாரன், அவனே வழக்குத் தொடுப்பவன், அவனே நீதிபதி. ஆகவே, நிறைய தீர்ப்புகள் ஒருதலைப்பட்சமானவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

இனி இந்த சான்றிதழ்களைப் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை… வெளியானது அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறப்பு… வெளியானது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

NEWSKADAI

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

MANIMARAN M

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M

“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…!!

NEWSKADAI

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

NEWSKADAI