Newskadai.com
தேர்டு ஐ

உயிர் பலி கேட்கும் நீட் தேர்வு இன்று தொடங்குகிறது…

Share this:

உலகம் முழுவதும் இன்னும் பல லட்சம் மருத்துவர்களின் சேவை இங்கு தேவை என்பதை இந்த ஒற்றை கிருமி கொரோனா(covid-19) நமக்கு உணர்த்தியுள்ளது. கிராமத்துக்கு ஒரு மருத்துவர் என்று கணக்கிட்டால் கூட இன்னும் பல லட்சம் மருத்துவர்களின் தேவை நம் நாட்டிற்கே உள்ளது. மக்களின் தேவையறிந்து தேவையான பொருட்களை உற்பத்தி செய்பவன் அல்லது விற்பவனே சிறந்த வணிகன். காடுகளை அழித்து, மலைகளை உடைத்து, விவசாய நிலங்களை தாரை வார்த்து, நீர் நிலைகளை சாக்கடைகள் ஆக்கி நமக்காகவும் உலகத்திற்காகவும் பொருட்களை உற்பத்தி செய்யப் போவதாக கூறும் நாம் ஏன் மருத்துவர்களையும் பல்துறை விற்பனர்களையும் உற்பத்தி செய்யக் கூடாது?

மற்ற வளங்களைப் போலவே இங்கு மனித வளமும் ஏராளமாக கொட்டிக் கிடக்கிறதே. இயற்கையை அழித்து லாபம் சம்பாதிப்பதை விட மனித ஆற்றல் வளர்த்து லாபம் சம்பாதிப்பது மிகுந்த லாபகரமாக இருக்கும்.

உலகம் வணிக மயமாக மாறிவிட்டது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த வணிகமய உலகத்தில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். வணிக உலகில் லாபம் ஒன்றே பிரதானம். பொய் பேசி ஏமாற்றி அபகரித்து கொன்றொழித்து எதை வேண்டுமானாலும் செய்து லாபத்தை ஈட்டுபவன் எவனோ அவனே இங்கே ஹீரோ.

அப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு பட்டு மெத்தை விரித்து பாலும் பழமும் கொடுத்து நாட்டையே தாரை வார்த்து, இதுதான் வளர்ச்சி! இதுதான் முன்னேற்றம்! என்று கூப்பாடு போடும் நாம், கொஞ்சம் மாற்றி யோசித்து நம் நாட்டில் கொட்டி கிடக்கும் மனித வளத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றி மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கலைஞர்களாக, கல்வியாளர்களாக, ஊடகவியலாளர்களாக, பல்துறை வித்தகர்களாக உலகத்திற்கு ஏற்றுமதி செய்வோம்.

பல லட்சம் பேர் மருத்துவம் படிக்க ஆசைப் பட்டாலும் அவர்கள் அத்தனை பேருக்கும் மருத்துவம் பயில கட்டமைப்புகளை உருவாக்குவோம். ஆனால் இன்று நுழைவுத் தேர்வுகளும் அதன் மதிப்பெண்கள் பட்டியலும், மிகமிகக் குறைந்த மதிப்பெண்களில் பறிபோகும் மருத்துவ கனவுகள் மட்டுமின்றி அவர்களின் உயிர்களும் பறிபோகக் கூடிய சூழல் தான் நிலவுகிறது.

மேலும் படிக்க : http://நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

சாதிக்க துடிக்கும் தகுதியுள்ள ஏழை எளிய மாணவர்கள் சாகத் துணிய காரணமாக அமைந்து வருகிறது NEET போன்ற நுழைவுத் தேர்வுகள். எனவே உயர் படிப்பு என்பதை சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக்கும் NEET போன்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தூக்கித் தூர போடுவோம். நாடும் நாட்டு மக்களும் “வளர்ச்சி” அடையவாருங்கள் நாம் உற்பத்தி செய்வோம் மருத்துவர்களை. ”நமக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும்”.

நீட் தேர்வை ஏற்றுகொள்ள முடியாமல், எதிர்ப்புகளோடு தமிழக மக்கள் எதிர்கொள்ளவும் தயாராகுகின்றனர். பல மாணவர்களின் உயிரை பலிவாங்கிய நீட் இன்று தொடங்குகிறது…


Share this:

Related posts

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI