Newskadai.com
தமிழ்நாடு

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

Share this:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலையில் உள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச் சரிவில் 30 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன. 22 குடும்பத்தைச் சார்ந்த 70க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்ளாக தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நடைப்பெற்று வரும் மீட்பு பணியில் மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச் சரிவில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

நான்கு நாட்களாக மீட்பு பணி நடைப்பெற்று வரும் பகுதியில் நாய் ஒன்று தன்னை வளர்த்தவர்களை பாசப் போராட்டத்துடன் தேடி அலைகிறது. அங்கு காணப்படும் துணிகளை மோப்பம் பிடித்து தனது வளர்பாளர்களை சோகத்துடன் தேடி வருகிறது. அந்த நாய்க்கு உணவு அளித்தாலும் சாப்பிட மறுத்து தேடி வரும் காட்சி மீட்பு பணியாளர்களைக் கண் கலங்க செய்துள்ளது.

இந்த கோர விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 14 பேர் உட்பட இப்பகுதியைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். “நில சரிவில் சிக்கி எனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் இறந்து விட்டனர். எனது தந்தை சண்முகையா(58), தாயார் சரஸ்வதி(50), மூத்த சகோதரி சீதாலட்சுமி(39), 2-வது சகோதரி ஷோபனா(32), அவரது கணவர் ராஜா(35) ஆகிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை” என்று சண்முகையாவின் மகன் விஜய் சோகத்துடன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ரத்தினபுரி என்ற நவாச்சாலை கிராமத்தைச் சேர்ந்த காந்திராஜன் (48) உடல் மீட்கப்பட்டது. இவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில், புது கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (47) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் புதுகிராமத்தைச் சேர்ந்த பவுன்தாய், ராசையா, தங்கம் என்ற பாக்யமேரி, ஜோஸ்வா, மகாலெட்சுமி, அருள் மகேஷ் ஆகிய 6 பேரை காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். இதில் ராசையா, சரோஜா (எ) மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண்மகேஸ்வரன் ஆகிய நால்வருடைய உடல்கள் இன்று மீட்கப்பட்டன. அண்ணாதுரை, மரியபுஷ்பம் ஆகியோர் உடல்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


Share this:

Related posts

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

NEWSKADAI

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

உங்க ஏரியாவில் பால் கிடைக்கலையா?… உடனே இந்த நெம்பருக்கு போன் போடுங்க… அசத்தும் அமைச்சர்…!

AMARA