Newskadai.com
இந்தியா

மக்களே உஷார்: கொசு மூலம் பரவுகிறது அடுத்த வைரஸ்… ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…!

Share this:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியாவில் புதிய வகை நோய் பரவும் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தே இன்னும் விடுபடாமல் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், சீனாவிலிருந்து மேலும் ஒரு வைரஸ் தொற்று பரவும் என்று எச்சரித்துள்ளது. கேட் க்யூ வைரஸ்(CQV) என அழைக்கப்படும் இந்த வைரஸ் க்யூலெக்ஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்களிலும், சீனா மற்றும் வியட்னாமில் உள்ள பன்றிகளிலும் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்ட்டிடியூட்(NIV) விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் இந்த வைரஸிற்கான நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த இருவரும் கேட் க்யூ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதால் அவர்களுக்கு இந்த ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கின்றன, அதனால் இந்த நோய் குறித்து தெரிய வந்துள்ளன என கூறியுள்ளது. சீனாவில் இந்த நோய்த் தொற்று பலருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேட் க்யூ வைரஸ், காய்ச்சல் நோய்கள், மூளைக்காய்ச்சல் மற்றும் குழந்தை என்செபாலிடிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று லைவ்மிண்ட் தெரிவித்துள்ளது. இந்த கேட் க்யூ வைரஸ்கள் க்யூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளால் பரவுகின்றன, மேலும் இது மனிதர்களுக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


Share this:

Related posts

அம்பலமானது பலே விவகாரம்… சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய காவல் அதிகாரி…!!

THAVAMANI NATARAJAN

கல்லூரி மாணவர்களை கவலையில் ஆழ்த்திய மத்திய அரசு… இதுக்காகவா இத்தனை நாள் வீட்டிலிருந்தோம்…!!

MANIMARAN M

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

ஒயர் தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை பாதுகாக்க தேசிய கவுன்சில் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

MANIMARAN M

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN