Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த வேலை…!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!

Share this:

கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் தற்போது தொடங்கி வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. ரயில் துறை என்றாலே அதில் பணி செய்பவர்கள் வட மாநிலத்தை சேர்ந்வர்களே அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக இருப்பவர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் விடப்பட்டதால் சென்னை ரயில்வே சேவை தொடங்கி உள்ளது.

railway இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள இந்திய ரயில்பெட்டித் தொழிற்சாலையான ICFல் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசன், கார்பென்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தினர் இல்லாத காரணத்தாலும், கொரோனா பரவல் காரணத்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

railway

அந்த வகையில் மொத்தம் 990 இடங்களுக்க ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 25 ம் தேதியே கடைசி நாளாகும். இது குறித்து கூடுதல் தகவல் வேண்டுமெனில் ஐசிஎப் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் பொறியியல், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இப்பணிக்கான தகுதியானது விண்ணப்பதாரர்களை மெரீட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள ஐசிஎப்-ல் பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வுக்கு தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

railway

மேலும் படிக்க : http://“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, ஐடிஐ.

பதிவு துவங்க வேண்டிய நாள் : 04.09.2020.

பதிவு செய்ய கடைசி நாள் : 25.09.2020.

வயது தகுதி : 15-24.


Share this:

Related posts

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN