Newskadai.com
அரசியல்

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

Vijayalakshmi
Share this:

கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், சாதி கட்சி தலைவர் ஹரி நாடார் மீதும் நடிகை விஜயலட்சுமி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கடந்த 26ம் தேதி இதுதான் என் கடைசி வீடியோ என வீடியோ ஒன்றை பகிர்ந்த விஜயலட்சுமி, கடந்த 4 மாதங்களாக தான் நீதிக்காக போராடி வருவதாகவும், யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை என குற்றச்சாட்டினார். மேலும் சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும், அவதூறாக பேசுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

vijayalakshmi
 

அந்த வீடியோவில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாகவும், தனது மரணத்திற்கு காரணமான சீமானை சும்மா விடாதீங்க என்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென விஜயலட்சுமி திருவான்மியூரில் உள்ள தனது இல்லம் உள்ள தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். தன்னுடைய புகாரின் பேரில் சீமான், ஹரி நாடார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, சீமானோ, ஹரி நாடாரோ தன்னிடம் சமானாத்திற்கு வரவில்லை என்றும், போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாலும் தனது வீட்டிற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று சபதம் செய்துள்ளார். என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்கனும்…


Share this:

Related posts

அதிர்ச்சியில் அதிமுக தலைமை… ஒரே நாளில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா…!

AMARA

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

தமிழக பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் கமலாலயம்…!

AMARA

ஆறே கேள்விகளில் மோடியை ஆட்டம் காண வைத்த ராகுல் காந்தி…!!

THAVAMANI NATARAJAN