Newskadai.com
சினிமா

“ஹிந்தி தெரியாது போடா”… கெத்தாக எதிர்ப்புகாட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள்..!!

Share this:

இந்தி தெரியவில்லையா? நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கனிமொழி எம்.பி.க்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த அவமதிப்பு, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில் இந்தி தெரியாத மருத்துவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் செயலாளர் பேசிய விவகாரம்,

முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தானும் இவ்வாறு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக கூறிய சம்பவம் போன்ற இந்தி தொடர்பான விவகாரங்கள் மக்கள் மத்தியில் புயலைக் கிளப்பி வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிப் பாடத் திட்டம் தொடர்பாகவும்  இதுப்போன்ற இந்தி திணிப்பு சர்ச்சைக்கு எதிராகவும் பல தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கோலிவுட் பிரபலங்களும் இந்தி திணிப்பிற்கு தங்களுடைய எதிர்ப்பை வித்தியாசமான முறையில் தெரிவித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் நிற்கும் நடிகர் சிரீஷ், “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார். 

இதற்கு கனிமொழி எம்.பி. “இண்ட்ரெஸ்ட்டிங்” என்று யுவனுக்கு பதில் டிவிட் செய்துள்ளது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. யுவன், சிரிஷைத் தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் இதே போன்று, “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்” “இந்தி தெரியாது போடா” என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்த புகைப்படங்களை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

 


Share this:

Related posts

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்த நயன்தாரா… அலறியடித்து ஓடிய பிரபல தயாரிப்பாளர்…!!

THAVAMANI NATARAJAN

தளபதி விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்… சோகத்தில் கோலிவுட்

NEWSKADAI

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

NEWSKADAI

அஜித்துக்கு மட்டும் ஓல்டு கெட்டப்பா?… “வக்கீல் சாப்” மோஷன் போஸ்டரை பார்த்து கொந்தளிக்கும் தல ஃபேன்ஸ்…!

AMARA

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI